உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழக மானத்தை அடகு வைத்தவர் பழனிசாமி அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

தமிழக மானத்தை அடகு வைத்தவர் பழனிசாமி அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல்: ''கூட்டணிக்காக டெல்லி சென்று தமிழகத்தின் மானத்தை அடகு வைத்தவர் பழனிசாமி '' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஓரணியில் தமிழ்நாடு விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சாதி, மதம், இனம், மொழிகளை கடந்து பல்வேறு இயக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. இதையெல்லாம் கடந்து ஏன் அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டம். இங்கு தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துகொடுக்கிறோம். இங்கு நம்மை விட மேலானவர்கள் இல்லை. இன்று சிலர் கொள்ளைப்புறத்தின் வழியாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பார்க்கிறார்கள். மக்கள் சக்தியை மீறிய சக்தி இங்கு இல்லை. ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்துக்கு வலுவான அடித்தளமாக திண்டுக்கல் மாவட்டம் இருக்க வேண்டும். எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக ஜி.எஸ்.டி., கொடுக்கும் மாநிலம் தமிழகம். ஆனால் நமக்கான பங்கு ஈவு தொகையை கொடுப்பதற்கு மத்திய அரசு மறுக்கிறது. மதவாத சக்திகளோடு கூட்டணி மாட்டோம் என அ.தி.மு.க.,வினர் சொன்னார்கள். ஆனால் கூட்டணிக்காக டெல்லி சென்ற பழனிசாமி தமிழகத்தின் மானத்தை அடகு வைத்துவிட்டார். இவருக்கு மக்களை சந்திப்பதற்கு என்ன தகுதி உள்ளது என்றார்.மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ