மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் உயர்ந்தது டோல்கேட் கட்டணம்
01-Apr-2025
கொடைக்கானல்:கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் இன்று முதல் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துத் துறை இடம், ரோஜா பூங்கா அருகே உள்ள அப்சர்வேட்டரி உள்ளிட்ட இரு இடங்களில் தற்காலிக பார்க்கிங் ஏற்படுத்தும் பணிகள் நடந்தன. பஸ்ஸ்டாண்ட் பகுதியில் பார்க்கிங் பணி நிறைவுற்று சோதனையாக இரு தினங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களுக்கு நகராட்சி கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதன்படி ஒரு மணி நேரத்திற்கு பஸ் ரூ. 100, வேன் ரூ.50, கார் ரூ.35, டூவீலர் ரூ. 15 என கட்டணம் வசூலிக்க உள்ளனர். பொது இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பர் என கமிஷனர் சத்தியநாதன் தெரிவித்தார்.
01-Apr-2025