மேலும் செய்திகள்
பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்
12-Apr-2025
பழநி : பழநி கோயிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.பழநியில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5 முதல் திரு ஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருஆவினன்குடி கோயில் முன்பு கல்யாண உற்ஸவம் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. நேற்று கிரி வீதியில் தேரோட்டம் நடைபெற்றது.இதில் எம்.எல்.ஏ., செந்தில்குமார், கலெக்டர் சரவணன், எஸ்.பி.பிரதீப், கந்த விலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ் குமரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து அய்யர், செந்தில்குமார், சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், நிகால்விஷ்ணு, சாய் கிருஷ்ணா மகளிர் சிறப்பு மருத்துவமனை கீதா சுப்புராஜ், வி.பி.எஸ் கிராண்ட் ஹோட்டல் பெரியசாமி, சுவாமி விலாஸ் முருகேசன், ஆனந்த விலாஸ் முனியாண்டி, திண்டுக்கல் மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞர் திருமலைசாமி, நோட்டரி வழக்கறிஞர்கள் ஜெயராமன், பெரியநாயகி அம்மன் அறக்கட்டளை சுந்தரம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அ.தி.மு.க., தங்கராஜ், தெண்டாயுதம் செட்டியார் பூஜா ஸ்டோர் கிருஷ்ணமூர்த்தி செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
12-Apr-2025