உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பான்மசாலா, குட்கா விற்பனை ஜோர் ; கடமை நடவடிக்கையால் எங்கும் தாராளம்

பான்மசாலா, குட்கா விற்பனை ஜோர் ; கடமை நடவடிக்கையால் எங்கும் தாராளம்

அரசு, புகையிலை, பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்க தடை செய்துள்ளது. இருந்த போதும் மாவட்டத்தில் ஏரா ளமான கடைகளில் திரைமறைவில் இவ்வாறான பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கும் போக்குள்ளது. பள்ளி பகுதி டீக்கடை, பெட்டிக்கடைகளில் அடைமொழிகள் இட்டு இவ்வாறான பொருட்கள் விற்கப்படுகின்றன. கூல் லிப் உள்ளிட்டவற்றை மாணவ சமுதாயம் பயன்படுத்தும் போக்குள்ளது. இவ்வாறான பொருட்களை விற்கும் நபர்கள் திறந்த வெளியில் நடமாடிய நிலையில் விற்கின்றனர். தடை பொருட்கள் முன்பை காட்டிலும் இரு மடங்காக புழக்கத்தில் உள்ளது. பெயரளவிற்கு அரசு விற்பனையை தடை செய்துள்ளதை அதிகாரிகள் பயன்படுத்தி வளம் காண்கின்றனர். வணிக நிறுவனங்களில் சோதனையிடும் அதிகாரிகள் கண்துடைப்பாக அபராதம் விதித்து சாமானியர்களை குறிவைத்து பலத்தை காண்பிக்கும் நிலையில் அதிகாரம் உள்ளவர்களை கண்டு கொள்வதில்லை. அரசு கொள்கை ரீதியாக புகையிலை, குட்கா, பான்மசாலா உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடையை அமல்படுத்தி கடுமை காட்டினால் இந்நிலை முற்றுப்பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி