உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அடியனுாத்து தண்டல்காரன்பட்டி ஸ்ரீ முல்லைநகர் ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஸ்ரீ பேச்சியம்மன்,ஸ்ரீ விநாயகர், முருகன் ஆஞ்சநேயர், சப்த கன்னிமார், துர்கை அம்மன், நாகம்மன் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் ஜெயராஜ்,அக் ஷயா கல்விக்குழுமத்தை சேர்ந்த செயலாளர்கள் மங்களராம், காயத்திரி, சிவானந்த கார்ப்பரேஷன் லோகநாதன்,சவுராஷ்டிரா சபை தலைவர் ராமமூர்த்தி, சுபம் பேப்பர்ஸ் சிவராம் பங்கேற்றனர். ரவிக்குமார்,சுமதி ஏற்பாடுகளை செய்தனர்.ரெட்டியார்சத்திரம்: ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டி விநாயகர், நல்லேந்திர அய்யனார், முருகன், செல்லியம்மன், பாப்பாத்தி அம்மன், மதுரை வீரன், கருப்பணசுவாமி, சப்த கன்னியர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை