உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பரப்பலாறு அணையில் யானைகள் உலா வருவதால் மக்கள் அச்சம்

பரப்பலாறு அணையில் யானைகள் உலா வருவதால் மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப்பகுதியில் மூன்று யானைகள் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள், கேழை ஆடுகள், காட்டுப்பன்றிகள் செந்நாய்கள் அதிகம் உள்ளன. மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய நிலங்களுக்கு வந்து தென்னை வாழை மரங்களை சேதப்படுத்தி செல்கின்றன. இந்நிலையில் பரப்பலாறு அணைப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி வந்த மூன்று காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இதனால் அணையின் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை யாரும் அச்சுறுத்தவோ விரட்டவோ கூடாது, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை