வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாட்டிலுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் வைப்பு தொகை பெற்றுக்கொண்டு திரும்ப பாட்டிலை தரும்பொழுது வைப்பு தொகையினை திரும்ப தந்தால் ஏதோ கொஞ்சமாவது இப்படிப்பட்ட சீர்கேடுகள் குறையலாம் செய்வார்களா?
மாவட்டத்தில் கொடைக்கானல், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி மாவட்ட மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இப்பகுதிகளில் பொது இடங்களில் குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளின் உள்ள கடைகளுக்கு முன்புறத்தில் இரவு நேரங்களில் மது குடித்து விட்டு அப்ப பகுதியில் அசுத்தம் செய்து சென்று விடுகின்றனர். விவசாய நிலங்களில் அருகே மது குடித்துவிட்டு வயல்களில் உடைந்த பாட்டில்களை போட்டு செல்கின்றனர். இதனால் வயல் வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள் காயமடைகின்றனர். குளத்துக்கரைகள் ,ஆற்றுப் பாலங்கள் ,பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை மினி பாராகவே குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி,கொடைக்கானல் சாலையில் அதிக சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் இருபுறமும் சாலை ஓரங்களில் மது அருந்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மது குடிக்கும் நபர்கள் அரைகுறை ஆடையுடன் படுத்து கிடக்கின்றனர். இதனால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை தொடர்கிறது. மேலும் மது போதையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடும் நிலை உருவாகிறது.
மது அருந்திவிட்டு முக்கிய தெருக்களில் உள்ள கடை வாசல்களில் படுத்து துாங்குகின்றனர். காலை நேரங்களில் அவர்களை அப்புறப்படுத்த கடைக்காரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அந்த இடத்தில் குடிகாரர்கள் அசுத்தம் செய்து வைப்பதால் சுத்தம் செய்ய மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மதுபோதையுடன் பஸ்சில் பயணம் செய்யும் நபர்கள் மற்ற பயணிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். பயணிகள், பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். சிலர் மது பாட்டில்களை வாங்கி வந்து ஓடும் பஸ்சிலே குடிக்கின்றனர். இதனால் கண்டக்டர் ,டிரைவரிடம் வாக்குவாதம் ஏற்படுகிறது. பொது இடங்களில் மது குடிப்பதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். -வைரமுத்து, பா.ம.க., திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர், பழநி.
பாட்டிலுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் வைப்பு தொகை பெற்றுக்கொண்டு திரும்ப பாட்டிலை தரும்பொழுது வைப்பு தொகையினை திரும்ப தந்தால் ஏதோ கொஞ்சமாவது இப்படிப்பட்ட சீர்கேடுகள் குறையலாம் செய்வார்களா?