உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் திட்டத்தை சீர்குலைக்கும் நபர்கள்

குடிநீர் திட்டத்தை சீர்குலைக்கும் நபர்கள்

வடமதுரை:வடமதுரை ஒன்றியம் மோர்பட்டி ஊராட்சி கோப்பம்பட்டிக்கு குடிநீர் சப்ளை வழங்கும் வகையில் நான்கு வழிச்சாலை அருகில் அரசு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இங்குள்ள ஊராட்சி குறுங்காடுகள் திட்ட மரங்களுக்கும் நீர் தரப்படுகிறது. 'சுவிட்ச்' கட்டமைப்பிற்கும் ஆழ்துளை கிணறுக்கும் இடையேயான மின் ஒயர்களை இதுவரை 6 முறை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். போலீசில் புகார் செய்தும் இதுவரை யாரும் சிக்கவில்லை. தற்போது மீண்டும் இங்கு மின்ஒயர்கள் துண்டித்து திருடு போனது. துணை பி.டி.ஓ., செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் வீரமணி போலீசில் புகார் செய்தனர். குடிநீர் கட்டமைப்பை செயல்படுத்தவிடாமல் சீர்குலைக்கும் நபர்களின் நடவடிக்கை ஒருபுறம், மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய பொறுப்பு மறுபுறம் என ஒன்றிய அதிகாரிகள் பரிதவிப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை