உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாதாள சாக்கடையால் சேதமாகும் குடிநீர் குழாய்கள் பழநி 6வது வார்டு மக்கள் அவதி

பாதாள சாக்கடையால் சேதமாகும் குடிநீர் குழாய்கள் பழநி 6வது வார்டு மக்கள் அவதி

பழநி,: பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தால் குடிநீர் குழாய்கள் சேதம் செய்யப்படுவதால் பழநி நகராட்சி 6வது வார்டுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்திரா நகர்,புது தாராபுரம் ரோடு, இட்டேரி ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் உள்ள இந்திரா நகர் சாலை, தெருக்களில் மாடு, குதிரை, நாய் என அனைத்து விலங்குகளும் சுற்றி திரிகின்றன. இதனால் தெருவில் டூவீலரில் செல்வது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தெருநாய் தொல்லையால் குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தீ புகையால் மூச்சு திணறல் அப்பாஸ்அலி, வாகன விற்பனையாளர், கவுண்டர் இட்டேரி ரோடு : சுப்பிரமணியபுரம் ரோடு, இட்டேரி ரோடு பகுதிகளில் வெளியூர் வாகனங்களின் போக்குவரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 6வது வார்டை இணைக்கும் இட்டேரிரோடு, புது தாராபுரம் ரோடு பகுதிகளில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதால் சிரமப்பட வேண்டியுள்ளது. பெரியப்பா நகரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி புகை குடியிருப்பு பகுதிகளில் வருகிறது. முதியவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. குழந்தைகள் சிரமம் அடைகின்றனர். குடிநீர் குழாய்கள் சேதம் தட்சிணாமூர்த்தி, மளிகை கடை, இந்திரா நகர்: கொசுத்தொல்லை அதிகளவில் வருகிறது. குப்பை சாலைகளில் கொட்ட படுவதால் காற்றில் பறந்து சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. இதனால் சாக்கடை நீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்ட பணியால் வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விடுகின்றனர். இதனை விரைவில் சரி செய்து தர வேண்டும் பாதாள சாக்கடை அமைக்கப்படும் சாலைகளை மேடு பள்ளங்களுடன் மூடி செல்கின்றனர். அவற்றை சரி செய்ய வேண்டும். குப்பை புகைக்கு தீர்வு வீரமணி ,கவுன்சிலர் (தி.மு.க.,) : வார்டில் குப்பை முறையாக அகற்றப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுள்ளது. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை பணியால் குடிநீர் குழாய் சேதமடைவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை கிடங்கில் இருந்து வரும் புகையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை