உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலங்கலான குடிநீரால் பழநி பாலசமுத்திரம் மக்கள் அச்சம்

கலங்கலான குடிநீரால் பழநி பாலசமுத்திரம் மக்கள் அச்சம்

பழநி: பழநி பாலசமுத்திரம் பேரூராட்சியில் பழுப்பு நிறத்தில் கலங்கலான குடிநீர் வருவதால் பொதுமக்கள் நோய் தொற்று அச்சத்தில் உள்ளனர்.பழநி பாலசமுத்திரத்தில் பாலாறு பொறுந்தலாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து பழநி நகர், பிற பகுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு செய்து வினியோகம் நடைபெறுகிறது. இதில் பாலசமுத்திரம் பேரூராட்சி சப்ளை குடிநீர் பழுப்பு நிறத்தில் கலங்கலாக வருகிறது. காய்ச்சி வடிகட்டி குடிக்கும் நிலை இருந்தாலும் நோய் தொற்று உருவாகுமோ என அச்சப்படுகின்றனர். பலமுறை மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !