உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தினமும் நடக்கும் விபத்துகளால் பாதிக்கும் வேம்பார்பட்டி ஊராட்சி மக்கள்

தினமும் நடக்கும் விபத்துகளால் பாதிக்கும் வேம்பார்பட்டி ஊராட்சி மக்கள்

கோபால்பட்டி: -சாலையோர ஆக்கிரமிப்புகள், சேதமான சாலைகள், சாலை நடுவே உள்ள தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் தொடர்ந்து நடக்கும் விபத்துகளால் வேம்பார்பட்டி ஊராட்சி மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வேம்பார்பட்டி ஊராட்சி வேம்பார்பட்டி-செடிப்பட்டி ரோடு, வேம்பார்பட்டி -மொட்டையகவுண்டன்பட்டி செல்லும் ரோடுகள் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் தற்போது புதிய சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோபால்பட்டியில் இருந்து கன்னியாபுரம் வரை செல்லும் ரோடும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதுடன் விடுதியின் அருகே குப்பை கொட்டுவது, திறந்தவெளி கழிப்பிடத்தால் அரசு விடுதி மாணவர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கோபால்பட்டியில் திண்டுக்கல், நத்தம், வேம்பார்பட்டி செல்லும் ரோடுகளில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. சனிக்கிழமை வார சந்தை நாட்களில் சாலைகளில் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்வதால் விபத்து அபாயம் உள்ளது. சாலைகளில் கடைகள் அமைக்காமல், வார சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் கடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுதவிர வேம்பார்பட்டி ஊராட்சியில் குடிநீர், திருவிளக்கு, சுகாதாரப் பணிகள் என நிறைவாக இருந்தாலும் கோபால்பட்டியில் கால்நடை மருந்தகம் எதிரே ரோட்டில் உள்ள தடுப்பு சுவரால் விபத்துக்கள் நடந்து வருகிறது. சாலை பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ஒளிரும் மின்விளக்குகள், சோலார் விளக்குகள், ஒளிரும் பட்டைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அமைக்காததாலும், சாலை தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க சாலையில் உள்ள தடுப்புகளில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த நெஞ்சாலை துறை முன்வர வேண்டும். ஒளிரும் விளக்குகள் இல்லை சி.ஆர்.ஹரிஹரன், அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி பொருளாளர், வேம்பார்பட்டி: நத்தம் திண்டுக்கல் செல்லும் சாலை 31 கிலோ மீட்டர் துாரம் கொண்டது. இந்த சாலையின் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. கோபால்பட்டி, கணவாய்ப்பட்டி, எர்ரமநாயக்கன்பட்டி, நத்தம், மெய்யம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒளிரும் விளக்குகள், தடுப்புகளுக்கு முன் எச்சரிக்கை வெள்ளை கோடுகள் இல்லை. இதனால் வாரந்தோறும் விபத்துகள் நடந்து வருகிறது. ஊர்ந்து செல்லும் வாகனங்கள் ஆர்.எப்.சி.ராஜ்கபூர், காங்கிரஸ் வட்டாரத் தலைவர், கோபால்பட்டி: கோபால்பட்டியில் வேம்பார்பட்டி ரோடு, திண்டுக்கல் ரோடு, நத்தம் ரோடு, பாறைப்பட்டி ரோடுகளில் வாகனங்கள் ஆட்டோக்கள் அதிகளவு நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் விபத்துகள் அதிக அளவு நடக்கிறது. சாலை நெடுகிலும் கடைகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கடைகளில் பொருட்கள் வாங்க வரும் நபர்களும் அவர்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் கூட ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ