மேலும் செய்திகள்
ரோட்டில் தாழ்வாக தொங்கும் கேபிள் ஒயரால் விபத்து
21-May-2025
கொடைக்கானல்: ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் பியர் சோலை அருவி, தாழ்வாக செல்லும் மின் ஒயரால் விபத்து என கொடைக்கானல் நகராட்சி 4 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.கல்லுக்குழி, ரைபிள் ரேஞ்ச் ரோடு, பியர்சோலை உள்ளடக்கிய இந்த வார்டு நகராட்சியின் மையத்தில் உள்ளது பியர் சோலை அருவி சுற்றுலாத்தலமாக உள்ளது. இது தற்போது மூடப்பட்டு கிடக்கிறது. தாழ்வாக செல்லும் மின் ஒயரால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது .வார்டு மக்களும் பரிதவிக்கின்றனர். ,சிதறி கிடக்கும் குப்பையால் சுகாதாரக் கேடு உருவாகிறது . அவ்வப்போது வந்து செல்லும் காட்டுமாடு நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். சேதமடைந்த ரோடுகளால் வாகனஓட்டிகள் ,பாதசாரிகள் தவிக்கின்றனர் . அடிக்கடி ஏற்படும் மின்தடையால் இரவில் இருள் சூழ்வதால் மக்கள் பாதிக்கின்றனர் . போதை ஆசாமிகளால் அவதி ராஜ்குமார், தச்சுத் தொழிலாளி: கல்லுக்குழியில் வீடுகளின் மேற்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் விபத்து அபாயம் உள்ளது. லாயிட்ஸ் ரோட்டில் இருபுறம் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. வார்டில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளால் குடியிருப்புவாசிகள் அச்சமடைகின்றனர். போதை ஆசாமிகளால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. வார்டில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். பழுதாகும் டிரான்ஸ்பார்மர் பழனிசாமி, டிரைவர்: பியர்சோலை அருவி 5 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது .இதை திறக்க வேண்டும். தெருநாய் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். வார்டில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும். வார்டில் ஏராளமான வீடுகளுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. நால்ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாவதால் மின்தடை ஏற்படுகிறது. பொது கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். தெருக்களில் குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும். போலீஸ் மூலம் நடவடிக்கை
நித்யா, கவுன்சிலர் (அ.தி.மு.க.,): வார்டில் இதுவரை ரூ. 2 கோடி வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 45 லட்சத்தில் சமுதாயக்கூடம் எம்.எல்.ஏ., மூலம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பியர்சோலை அருவி திறக்க வனத்துறையிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரோட்டில் நிறுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நிதி குறைவாக உள்ளதால் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. பட்டா வழங்க நடவடிக்கை தொடர்கிறது. சிசிடிவி கேமரா சொந்த செலவில் அமைக்கப்படும். சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் பழுதை சீரமைக்க வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர் என்றார்.
21-May-2025