உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருஆவினன்குடி உள்ளிட்ட 5 கோயில்களில் இந்தாண்டு கும்பாபிேஷகம் நடத்த திட்டம்

திருஆவினன்குடி உள்ளிட்ட 5 கோயில்களில் இந்தாண்டு கும்பாபிேஷகம் நடத்த திட்டம்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருஆவினன்குடி கோயில் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் இந்தாண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் 50 கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. பழநி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் 2014 செப்., 7, அடிவாரம் வடக்கு கிரி வீதி வீரதுர்க்கை அம்மன் கோயிலில் 1999 அக்., 29, பழநி மேற்கு ரத வீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 2012 நவ., 11ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயில்களில் இந்தாண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் பணிகள் தீவிரமாக நடக்கிறது. மேலும் சத்திரப்பட்டி பெரியகோட்டை விநாயகர் கோயில், ஆயக்குடி வேளீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் பாலாலய பூஜை நடந்து கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன. மேலும் கோயில்களின் பழமைதன்மை மாறாமல் தொல்லியல் துறையிடம் முறையான அனுமதி பெற்று பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை நவம்பருக்குள் நிறைவு செய்து இந்தாண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டிலுள்ள மேலும் பல்வேறு கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ