உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  போஸ்டர் போரில் பா.ம.க.,

 போஸ்டர் போரில் பா.ம.க.,

வடமதுரை: வடமதுரை பத்திரப் பதிவு அலுவலகத்தில் 14 ஆண்டுகளாக நிரந்தர சார்பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிவோர் மாற்று பணியாக வருகின்றனர். இதனால் மேனுவல் வில்லங்க சான்று ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் இடித்தடிக்கப்படுதல் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. பாதிக்கப்படும் மக்களுக்காக பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் நுாதன முறையில் போஸ்டர்கள் மூலம் அவ்வப்போது சிரமங்களை வெளிகாட்டுகின்றன. இவ்வரிசையில் தற்போது பா.ம.க., சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், ஒரு மாதமாக மேனுவல் நகல், வில்லங்கம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு பணம் செலுத்தியும் ரசீதும், சான்றிதழும் தரப்படவில்லை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !