மேலும் செய்திகள்
யானை பற்களை விற்க முயன்ற மூவர் கைது
01-Dec-2024
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பில்டிங் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் அழகர். இவரது 2வது மனைவி புண்ணியவதி 65. அழகர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். பூலத்துாரை சேர்ந்த இவர்கள் திருமணத்திற்கு பின் வத்தலக்குண்டில் 15 ஆண்டுகளாக குடியிருந்தனர். கணவர் இறப்பிற்கு பின் முதல் மனைவியின் பிள்ளைகள் புண்ணியவதியை கண்டு கொள்ளவில்லை. பராமரித்தல் இல்லை. சொத்து, பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றனர். புண்ணியவதிக்கு குழந்தை இல்லாததால் ஆதரவற்று வறுமையில் வாடினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்னை அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தனர். திண்டுக்கல் சமூகநலத்துறையினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். வத்தலக்குண்டு போலீசார் புண்ணியவதியை அன்னபூரணி தொண்டு நிறுவனம் உதவியுடன் பழநி காப்பகத்தில் சேர்த்தனர்.
01-Dec-2024