மேலும் செய்திகள்
ரோட்டோரத்தில் நாட்டுவெடி: -2 பேர் கைது
27-Aug-2024
கஞ்சா விற்றவர் கைதுநத்தம்:நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நத்தம்- செந்துறை ரோட்டில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவுட்டர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த சசிக்குமார் 47, என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.லாட்டரி விற்றவர் கைதுஎரியோடு: எரியோடு பாண்டியநகரை சேர்ந்தவர் மாரிக்கண்ணு51. கேரள மாநில லாட்டரி சீட்டுகளை ரகசியமாக வாங்கி வந்து இப்பகுதியில் விற்றார். போலீசார் அவரை கைது செய்தனர். 25 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.டூவீலர்கள் திருட்டுவடமதுரை: வடமதுரை காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த நெடுஞ்சாலை துறையில் டிரைவராக பணியாற்றுபவர் சஞ்சீவிகுமார் 45. வார சந்தைக்கு எதிர்புறம் பத்திர பதிவு அலுவலகம் அருகில் தனது டூவீலரை நிறுத்தி சென்ற நிலையில் திருடு போனது. இதே போல கடந்த வாரமும் இரு டூவீலர்கள் திருடு போயின. போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Aug-2024