உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்.......

போலீஸ் செய்திகள்.......

கையாடல் செய்தவர் கைதுதிண்டுக்கல் : சின்னாளப்பட்டி மேலக்கோட்டையை சேர்ந்தவர் அரிச்சந்திரன்43. திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் 5 ஆண்டுகளாக வேலை செய்கிறார். பெட்ரோல் போடுவதற்காக ரூ.1.50 லட்சத்தை பெற்று கொண்டு அந்த பணத்தை கையாடல் செய்தார். மேற்கு போலீசார் அரிச்சந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்றவர்கள் கைதுதிண்டுக்கல்: எம்.வி.எம்.நகர் சின்னையாபுரத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி28. ஆர்.எம்.காலனி பகுதியில் நேற்று கஞ்சா விற்றார். தகவலறிந்த மேற்கு போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜான்கென்னடியை 27,கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மிரட்டியவர் கைதுதிண்டுக்கல்: குமரன் திருநகரை சேர்ந்தவர் அழகுமணி23. அனுமந்தநகர் பகுதியில் அவ்வழியில் செல்லும் மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். போலீசார் கைது செய்தனர்.கஞ்சா விற்றவர் கைது திண்டுக்கல்: குமரன் திருநகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்25. அப்பகுதியில் கஞ்சா விற்றார். வடக்கு போலீசார் இவரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ