மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
13-Oct-2025
சாணார்பட்டி: சிறுகுடி-குப்பபட்டியை சேர்ந்தவர் சின்னையா 55. அதிகாரிபட்டி அரசு டாஸ்மார்க் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். சாணார்பட்டி தேத்தாம்பட்டியை சேர்ந்த மனோஜ் குமார் 29,பெத்தய கவுண்டன்பட்டியை சேர்ந்த லிங்கேஸ்வரன் 25, காம்பார்பட்டியை சேர்ந்த வடிவேல் 43, ஆகிய 3 பேரும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு காசு கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர். சின்னையாவை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.சாணார்பட்டி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கல்லுாரி மாணவர் பலி திண்டுக்கல், : தாடிக்கொம்பு காமராஜபுரத்தை சேர்ந்தவர் பரத் 17, காந்திகிராம பல்கலையில் பி.இ.,முதலாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்கள் சபரீஷ்வரன் 18, கலையரசன் 18 ,உடன் டூவீலரில் மதுரை சேலம் பைபாஸ் ரோட்டில் சென்றார். டூவீலரை சபரீஷ்வரன் ஓட்டினார். அவர்கள் வத்தலகுண்டு சாலையில் தனியார் மர மில் அருகே வந்தபோது சாலை ஓர தடுப்புக்கல் மீது மோதியதில் பரத் இறந்தார். மற்ற 2 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். வேன் மோதி மாடு பலி வடமதுரை: தாமரைப்பாடி கோவில்யாகப்பன்பட்டி சம்மனசுமேரி வளர்த்த பசு மாடு திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தது. புத்துார் கரிவாடன்செட்டிபட்டி திருப்பதி ஓட்டிய சரக்கு வேன் மோதி பசு மாடு இறந்தது. வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார். விபத்தில் காயம் வடமதுரை: திண்டுக்கல் ஏழுமலையான் நகரை சேர்ந்தவர் முருகன் 50. நெடுஞ்சாலை ரோடு இன்ஸ்பெக்டர். நேற்று டூவீலரில் டி.என்.பாறைப்பட்டி பிரிவு அருகே சென்றபோது லாரி மோதி காயமடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Oct-2025