உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

மிரட்டிய வாலிபர் கைது நத்தம்: -நேருநகரை சேர்ந்தவர் இளையராஜா 25. தனியார் பஸ்களை கிளீன் செய்யும் வேலை செய்து வருகிறார்.இவரை அக்.27 இரவு நத்தத்தை சேர்ந்த அப்துல்ரகுமான் 22, யாசர்அராபத் 23, ஆகிய இருவரும் கோவில்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்து சென்றனர். பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.இதை அவர்கள் வீடியோ எடுத்து இளையராஜாவுக்கு அனுப்பி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளனர். நத்தம் போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்தனர்.யாசர் அராபத்தை தேடி வருகின்றனர். திருடிய 2 பேர் கைது திண்டுக்கல்: பேகம்பூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரபீக். இவர் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த டூவீலர்திருடு போனது. திண்டுக்கல் தெற்கு போலீசார் திருடிய மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துவேல் 23 ,முத்தழகுப்பட்டியை சேர்ந்த ஜெபஸ்டின் ஜான்சன் 23,ஆகிய 2 பேரை கைது செய்தனர். விபத்தில் மேலாளர் பலி திண்டுக்கல்: நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் மேலாளர் பிரபு 33.துறையூர் ரோட்டை சேர்ந்த நண்பர் கவுதம் 27, உடன் காரில் திண்டுக்கல் வந்தார். முன்னால் சென்ற கார் மீது மோதியதில் பிரபு இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ