உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்...

விபத்தில் வியாபாரி பலி வடமதுரை: சாணார்பட்டி அஞ்சுகுளிப்பட்டி தினேஷ்குமார் 32, டூவீலரில் வேல்வார்கோட்டை பகுதியில் சென்றபோது, எதிரே அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரி முகமது பக்ருதீன் 52, ஓட்டி வந்த டூவீலருடன் மோதியது. இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. விபத்தில் படுகாயமடைந்த முகமது பக்ருதீன் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். தினேஷ்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர். கார் கவிழ்ந்து ஐவர் காயம் எரியோடு : வெல்லம்பட்டி காலனி பொதுமக்கள் சார்பில் சதுர்த்தி விழாவிற்காக பிரதிஷ்டை செய்த சிலையை அழகாபுரி அணையில் கரைத்து விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் 7 பேர் ஊர் திரும்பினர். கோவிலுார் ரோட்டில் பண்ணைக்குளம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. டிரைவர் ஆனந்தன் 48, பழனியம்மாள், முருகன் உள்பட 5 பேர் காயமடைந்தனர். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர். 6 பேர் காயம் நெய்க்காரப்பட்டி: கொழுமம் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டியில் இருந்து விநாயகர் ஊர்வலத்திற்கு வந்த ட்ராக்டர் திரும்பி சென்றது. பாரதி நகர் பகுதி அருகே எதிரே வந்த சரக்கு வண்டி மோதியதில் டிராக்டரில் அமர்ந்திருந்த 6 பேர் கீழே விழுந்தனர். இதில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் 18, கார்த்திகேயன் 21, சஞ்சீவி 21, சபரிநாதன் 18 உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை