உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அபராதம் விதிக்க தயங்கும் போலீஸ்

ரோட்டில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அபராதம் விதிக்க தயங்கும் போலீஸ்

கொடைக்கானல் : கொடைக்கானலில் ரோட்டில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட மலர் கண்காட்சி, கோடை விழாவிற்காக வந்த சுற்றுலா பயணிகள் தவித்தனர்.கொடைக்கானலில் மலர் கண்காட்சி, கோடை விழா நேற்று தொடங்கியது. இதற்காக நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட், அப்சர்வேட்டரி ரோஜா பூங்கா பகுதியில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் பலர் பார்க்கிங் வசதியை பயன்படுத்தாமல் ரோட்டோரம் நிறுத்தும் போக்கால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று காலை நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் தவித்தனர்.இதை தொடர்ந்து அண்ணாசாலை, உட்வில் ரோடு, கிளப் ரோடு, செவன் ரோடு மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களாலும் நெரிசல் ஏற்பட்டது.நகராட்சி பார்க்கிங் வசதியை ஏற்படுத்திய போதும் போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாததால் வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்தும் போக்கு உள்ளது.துவக்கத்தில் பார்க்கிங் தவிர்த்து ரோட்டில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் கலெக்டர் சரவணன் எச்சரித்த போதும் போலீசார் துளியும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாறாக இது போக்குவரத்து நெரிச்சலுக்கு வித்திடுகிறது.மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரோட்டோரம் நிறுத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாலும் மட்டுமே இது தவிர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ