உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்க தி.மு.க., தயாரா பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்க தி.மு.க., தயாரா பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

திண்டுக்கல்: ''தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க தி.மு.க., தயாரா,'' என, பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., அச்சம் அடைந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளை மூடுவதற்கு காரணம் தி.மு.க., அரசு. அவற்றை தனியார் பள்ளிகள் போல தரம் உயர்த்த வேண்டும். ஜி.எஸ்.டி., குறைப்பு நாளைய சரித்திர பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டியது. நான்கரை ஆண்டாக அடிப்படை தொண்டர்களுக்கு கூட தி.மு.க. கசப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. மீனவர்கள் பிரச்னை, நீண்ட காலமாக இருக்கிறது. தமிழக மீனவர்கள் எங்கள் குழந்தைகள். 1962 முதல் தி.மு.க., கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. அவர்கள் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க தயாரா. தினகரன் பேசியதை எல்லாம் பெரிதாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை