பொங்கல் பஸ்களால் 10 நாளில் ரூ.11.50 கோடி வசூல்
திண்டுக்கல்: பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களால் 10 நாளில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.11.50 கோடி வருமானம் கிடைத்துள்ளது. பொங்கலையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்ட வசதிக்காக திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் ஜன.10 முதல் ஜன.20 வரை 900 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் சிரமமின்றி சிறப்பு பஸ்களில் சென்றனர். அந்த வகையில் ஜன.10 முதல் நேற்று வரை 37.41 லட்சம் பயணிகள் பயணித்தனர். இவர்கள் மூலம் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.11.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சிறப்பு பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள், அலுவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட 18,000 பேர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர்.