மேலும் செய்திகள்
முயல் வேட்டையாடிய நால்வர் கைது
10-Oct-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்த மூவருக்கு வனத்துறையினர் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர். மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கிடிஜாலா உத்தரவின்பேரில் திண்டுக்கல் மேற்கு வட்டம் பொன்னிமாந்துறை பகுதியில் சிறுமலை வன அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே டூவீலரில் வந்த மூவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த பையில் இரண்டு கிலோ காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது. இறைச்சி, டூவீலரை பறிமுதல் செய்த வனத்துறையினர், மூவரையும் மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள் பொன்னிமாந்துரை மணிகண்டன் 28, பூபதி ராஜா 23, சவரிமுத்து 27 என்பதும், குடகனாற்று பகுதியில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை வெட்டி எடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
10-Oct-2026