மேலும் செய்திகள்
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
10-Aug-2025
சாணார்பட்டி : மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்களின் நலன் வேண்டி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்தியங்கிரா தேவி யாக பூஜையை சபை நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் மிளகாய் வத்தல் மூடை மூடையாக கொட்ட வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி கோசாலையில் 100க்கு மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்க அமாவாசை கோபூஜை நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
10-Aug-2025