உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீடியோ காலில் பேச ஆர்வம் காட்டும் கைதிகள்

வீடியோ காலில் பேச ஆர்வம் காட்டும் கைதிகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் வீடியோ காலில் உறவினர்களிடையே பேச கைதிகள் ஆர்வம் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள மத்திய சிறை, பல்வேறு கிளை சிறைகளில் ஏராளமான கைதிகள் உள்ளனர். இவர்கள் சிறைக்குள் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், வழக்கறிஞர்களை மனு பதிவு செய்து காண வசதிகள் இருந்தது. இதற்கிடையில் கைதிகளுக்கு உதவும் விதம் கைதிகள் வீடியோ காலில் பேச வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர்.அதன்படி திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் கைதிகள் வீடியோ கால் பேச தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் கணினி மூலம் வீடியோ கால் பேசும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பேச கட்டணம் கைதிகளின் வங்கி கணக்கிலிருந்து வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறையில் உள்ள கைதிகள் எளிதில் பேசி, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.சிறை அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் சிறையில் 200க்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தினமும் 30க்கும் மேற்பட்ட கைதிகள் ஆர்வமாக வீடியோ கால் மூலம் உறவினர்கள்,வழக்கறிஞர்களிடம் பேசுகின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ