உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வடமதுரை: தி.மு.க., கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தமிழகத்தை சேர்ந்த சில கட்சிகளை விமர்சிக்கும் போது மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதற்காக அவரை கண்டித்தும், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் அய்யலுாரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.செயலாளர் முத்துப்பாண்டி, குழு உறுப்பினர்கள் குணசேகரன், முருகேசன் பேசினர்.பழநி: பழநி தாலுகா அலுவலக வளாகத்திற்கு முன்பு மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, பழநி நகரச் செயலாளர் தங்கவேலு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி