உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மண் லாரிகளை மடக்கி போராட்டம்

 மண் லாரிகளை மடக்கி போராட்டம்

எரியோடு: எரியோடு அருகே அனுமதியின்றி குளத்தில் செம்மண் அள்ளி சென்ற 3 லாரிகளை வழிமறித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் குஜிலியம்பாறை ரோட்டில் இருக்கும் புளியம்பட்டி பகுதி குளத்தில் அனுமதியின்றி லாரிகளில் செம்மண் எடுத்து செல்லப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல் இக்குளத்தில் செம்மண் அள்ளி வந்த 3 லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எரியோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்து லாரிகளை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ