உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தரையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்

தரையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்

சாணார்பட்டி : - சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது.தீவனங்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் லிட்டருக்கு ரூ. 10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.51 என விலையை உயர்த்த வேண்டும். ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ