மதுக்கடையை மூடக்கோரி மறியல்
கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே மணியக்காரன்பட்டியில் மதுபான கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திம்மணநல்லுார் ஊராட்சி மணியக்காரன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறது. இங்கு மது குடித்துவிட்டு குடிமகன்கள் பல்வேறு பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர். ஆத்திரமடைந்த மக்கள் கோபால்பட்டி சாலை ஜோத்தாம்பட்டி பிரிவு அருகே மறியலில் ஈடுபட்டனர்.சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி கலைந்து சென்றனர்.