உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தருமத்துப்பட்டியில் மறியல்

தருமத்துப்பட்டியில் மறியல்

கன்னிவாடி: தருமத்துப்பட்டி வடக்கு காலனியில் சில வாரங்களாக குடிநீர் வினியோகத்தில் குளறுபடி நீடிக்கிறது. பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆட்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. ஆவேசமடைந்த மக்கள் நேற்று செம்பட்டி -பழநி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிதி ஆதாரம் வரப்பெற்றதும் கூடுதல் பைப்லைன் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கலைந்தனர். இப்பிரச்னையால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்க வெளியூர் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி