மேலும் செய்திகள்
தீபாவளி பரிசு வழங்கல்
20-Oct-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி ஆசிரியர்களுக்கு நாற்காலிகள் வழங்கினர்.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கு மேயர் இளமதி தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கால்பந்து கழக செயலாளர் சண்முகம், முகமது சதக்கத்துல்லா குரூப்ஸ் கலந்து கொண்டனர். ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகளை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கினர். ரோட்டரி சங்க செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
20-Oct-2024