உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் ஜீப்பை அகற்றாமல் ரோடு அமைத்த அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அதிருப்தி

கொடை யில் ஜீப்பை அகற்றாமல் ரோடு அமைத்த அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அதிருப்தி

கொடைக்கானல்: கொடைக்கானலில் புதியதாக ரோடு அமைத்தபோது காலாவதியான ஜீப் நிற்கும் பகுதியை தவிர்த்து ரோடு அமைத்த அவலம் அரங்கேறியுள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் சேதமடைந்த ரோடுகள் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் செவன் ரோடு கவி தியாகராஜர் ரோடு வரை ரோடு அமைக்கும் பணி நடந்தது. இதில் அரசு மருத்துவமனை முன்பு காலாவதியான ஜீப் நிறுத்தப்பட்ட நிலையில் வாகனத்தை அகற்றாமல் அந்த இடைத்தை விட்டு ரோடு அமைக்கப் பட்டுள்ளது. இந்த ரோட்டில் ஆவின் பாலகம்,நுாலகம், போலீஸ் தங்கும் விடுதி, வார சந்தை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன.ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் அடிகுழாய், வாகனங்களை அகற்றாமல் ரோடு அமைத்தது குறித்து சர்ச்சை பற்றி சமூக வலைதளத்தில் பேசும் பொருளானது. இதையடுத்து ரோடு அமைக்கும் பணியின் போது காலாவதியாக நிற்கும் வாகனங்கள், செயல்பாடாற்ற பொருட்களை அகற்றிய பின் ரோடு பணிகளை துவங்க வேண்டும் என உத்தரவிடப் பட்டது. தற்போது கொடைக்கானலில் காலாவதியான ஜீப்பை அகற்றாமல் கான்ட்ராக்டர் ரோடு அமைத்தது குறித்து பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rasaa
ஆக 15, 2025 11:54

இதுதாண் திராவிட மாடல். போக போக பாருங்கள். ரோடே இல்லாமல் ரோடு போடுவார்கள்.


Mani . V
ஆக 14, 2025 06:50

எந்தக் கொம்பனும் குறை சொல்லவே முடியாத மாடல் ஆட்சியின் சாதனை.


நிக்கோல்தாம்சன்
ஆக 14, 2025 05:14

சந்தோஷப்படுங்க திராவிட மாடலில் இதெல்லாம் சகஜமப்பா , வேலூரில் பைக்கை சாலையோடு புதைத்ததில் ஆரம்பித்து , 16 கோடி ரூபாய் பாலம் தண்ணீரோடு கொஞ்சி குலாவி கலந்ததையும் பார்த்துள்ளளோம்


புதிய வீடியோ