பூஜாரிகள் பேரமைப்பு கூட்டம்
திண்டுக்கல்: பூஜாரிகள் பேரமைப்பின் மாவட்ட கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணக்குமார், செயலர் சந்தோஷ்குமார், பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பு செயலர் குமார் வரவேற்றார். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏதோ காரணம் காட்டி நிராகரிப்புகள் செய்வது தவிர்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்க வேண்டும் உள்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வடமதுரை ஒன்றிய தலைவர் லுார்துராஜ் நன்றி கூறினார்.