உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு

ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற 18 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. பாம்பு இறுக்கியதால் ஆட்டுக்குட்டி இறந்தது.சந்தையூரில் முத்துராக்கு என்பவரின் ஆடுகள் வைகை ஆற்றின் கரையில் மேய்ந்தன. திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த ஆடு மேய்ப்பவர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது 18 அடி நீள மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை ஒன்றை பிடித்து இறுக்கி விழுங்க முயன்றது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினரிடம் தெரிவித்தனர். அவர்கள் மலைப் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை உடல் முழுவதும் இறுக்கியதில் இறந்தது. வைகை ஆற்றில் தொடர் மழை, அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் வருவதால் ஆறு வழியாக பாம்பு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி