ரேபிஸ் தடுப்பூசி முகாம்
செந்துறை: செந்துறையில் மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி தெருநாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர் குமரேசன் தலைமையிலான குழுவினர் செந்துறை பகுதிகளில் சுற்றித்திரிந்த 30-க்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தினர்.