காக்க வைக்கும் ரயில்வே கிராசிங்; திணறும் திண்டுக்கல் மக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில்வே பாதைகளில் குறுக்கிடும் ரோடுகள் அதிகம் உள்ளன. பல இடங்களில் மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் இவைகள் எதுவும் இல்லாமல் ரயில் வந்து செல்லும் வரை ரோடுகளில் வாகனஓட்டிகள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. இதனால் அவசரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டுஅனைத்து கிராசிங்கிலும் மேம்பாலம் இல்லையேல் சுரங்கப்பாதை ஏற்படுத்த துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.