உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மழை நீர் ஒழுகும் ஒட்டன்சத்திரம் நீதிமன்றம்; வீணாகும் ஆவணங்கள்

 மழை நீர் ஒழுகும் ஒட்டன்சத்திரம் நீதிமன்றம்; வீணாகும் ஆவணங்கள்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சார்பு நீதிமன்ற கட்டடம் மழை காலத்தில் ஒழுகுவதால் ஆவணங்கள் நனையும் நிலை உள்ளது. ஒட்டன்சத்திரம் சார்பு நீதிமன்றம் 2022 ல் காமராஜர் மார்க்கெட்டில் வாடகை கட்டடத்தில் திறக்கப்பட்டது. மழை பெய்தால் நீதிமன்றம் செயல்பட முடியாத அளவிற்கு மழை நீர் ஒழுகுகிறது. இதனால் வழக்கு ஆவணங்கள் மழையில் நனைந்து சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இரு வாரங்களுக்கு முன்பு நீதிமன்றம் நடந்தபோதே மழைநீர் ஒழுகியதால் நீதிமன்ற பணியானது ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்பே மீண்டும் நடந்தது. ஒட்டன்சத்திரம் வழக்கறிஞர் சங்கத்தினர் கூறியதாவது: ஒட்டன்சத்திரத்தில் கல்வித்துறைக்கு சொந்தமான 2.30 ஏக்கர் இடத்தை நீதித்துறைக்கு ஒப்படைக்க பிப்.2025 அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர் பயிற்சி மைய அதிகாரிகள் காலி செய்யாமல் உள்ளனர். கல்வித் துறையினர் அரசின் அரசாணையினை மதிக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் சார்பு நீதிமன்றத்தில் மழைக்காலங்களில் வழக்கறிஞர்கள் குடைகளை பிடித்து கொண்டுதான் வழக்கினை நடத்தும் நிலை உருவாகி உள்ளது. வழக்கு அசல் ஆவணங்களில் மழைநீர் புகுந்து சேதம் அடையும் பட்சத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது. தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் உடனடியாக தலையிட்டு ஒட்டன்சத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தினை புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ