ரேஷன் அரிசி பறிமுதல்; கைது 1
கொடைரோடு:விருதுநகரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக நாமக்கல்லுக்கு கடத்தப்பட்ட 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்டதாக மதுரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.விருதுநகரை சுற்றியுள்ள வீடுகளில் அப்பகுதியைச் சேர்ந்த கர்ணன் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைக்கு விற்பதற்காக 14 டன் வரை வாகனத்தில் அனுப்பினார். கொடைரோடு டோல்கேட்டில் திண்டுக்கல் சிவில் சப்ளை போலீசார், பறக்கும் படை தாசில்தார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இந்த வாகனம் சிக்கியது.வாகன உரிமையாளரும் டிரைவருமான மதுரை சிலைமான் ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி விற்ற கர்ணன், வாங்கிய கோழிப்பண்ணை உரிமையாளர் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.