உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: ரேஷன்கடைகளில் இணைய வழியில்(புளூடூத்) மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை செய்வதை எளிமைப்படுத்த வேண்டும்.நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருள்களை சரியான எடையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட போராட்டக் குழுத் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அன்பரசு, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் காளிச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை த்தலைவர்கள் பாலமுருகன், செல்வம், இணைச்செயலர்கள் மைக்கேல்ஆரோக்கியராஜ், கணேசமூர்த்தி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை