உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்

2016 ல் மத்திய அரசால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கு மாற்றாக புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அந்த நேரத்தில் சிலர் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என தவறான வதந்தியை பரப்பினர். இந்த தவறான வதந்தியால் வியாபாரிகள், பஸ் நடத்துனர்கள் என பலரும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர். இதை தொடர்ந்து அரசு, வங்கி அதிகாரிகள் அனைத்து வகையான 10 ரூபாய்நாணயங்களும் செல்லும் என தெரிவித்து வந்தனர். இதனால் மற்ற மாவட்டங்களில் இந்த நாணயத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க சிலர் மறுத்து வருகின்றனர். இதனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பொருட்கள் வாங்கும் போதும், பஸ் பயணங்களின் போதும் நாணயத்தை வாங்க மறுப்பதால் வாக்குவாதம் தொடர்கிறது. 10 ரூபாய் நாணயம் குறித்த தவறான வதந்தியாலும், அறியாமையாலும் பொதுமக்கள் பலர் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.இது குறித்து வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பத்து ரூபாய் நாணயம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. மாவட்ட நிர்வாகமும் வழி காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Swaminathan
ஏப் 10, 2024 11:15

அனைத்து வங்கிகளிலும் பத்து ரூபாய் நாணயம் பெற்றுக் கொள்ளப் படும் என்று போர்டு வைக்க வேண்டும்


Swaminathan
ஏப் 10, 2024 11:11

அனைத்து வங்கிகளிலும் இங்கு ரூபாய் நாணயங்கள் பெற்றுக் கொள்ளப் படும் என்று போர்டு வைத்தால் போதும் அனைவரும் தைரியமாக நம்பிக்கையுடன் வாங்கத் தொடங்குவார்கள் புழக்கத்துக்கு வந்து விடும்


Ramaswamy Vasudevan Srinivasan
ஏப் 07, 2024 05:58

வாட்சப்ப்பில் சிலர் பரப்பியவதந்திதன் இதற்கெல்லாம் காரணம் அரசு உடன் இதை வாங்கவிடில் குற்றம்என அறிவிக்கவேண்டும் சென்னை தவிர எல்லா ஊரிலும் இதே நிலைதான்


Ramaswamy Vasudevan Srinivasan
ஏப் 07, 2024 05:58

வாட்சப்ப்பில் சிலர் பரப்பியவதந்திதன் இதற்கெல்லாம் காரணம் அரசு உடன் இதை வாங்கவிடில் குற்றம்என அறிவிக்கவேண்டும் சென்னை தவிர எல்லா ஊரிலும் இதே நிலைதான்


Boopathiraja
ஏப் 06, 2024 15:17

வாங்க மறுப்பவர்கள் விழிப்புணர்வு இல்லாதவர்கள் அல்ல காங்கிரஸ் தீமுக எதிர்கட்சி ஆதரவாளர்கள் மக்களை கோபப்படுத்தி வாங்க மறுத்து தங்களுக்கு வாக்களிக்குரம் படி செய்துகொள்கிறார்கள் இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை பல வருடங்களாக மத்தியரசு திணறி வருவது கவலை அளிக்கிறது


Pedia
ஏப் 06, 2024 10:29

ஒன்லி கிசடொமெர் ஆர் நோட் கெட்டிங் ௧௦ ரூபே coin


Raj
ஏப் 06, 2024 00:18

இந்தியாவில் வெளியிட்ட நாணயத்திற்கு உள்நாட்டிலேயே மதிப்பு இல்லை அசிங்கம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்


Mohan
ஏப் 05, 2024 19:44

மத்திய அரசின் தோல்வி என கூறும் படித்த மேதாவியே சட்டத்தை மதிக்காமல் இருக்க தூண்டியது திராவிஷ அரசின் அரசியல்வாதி காண்டிராக்டர்களும் தமிழ் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களும் சில ஸ்டேட் வங்கிகளுமே இதற்கு முக்கிய காரணம் அரசின் நாணயங்களை பெற மறுப்பது குற்றம் தமிழக அரசு தனது தான்தோன்றித்தனத்தை மூட்டை கட்டி வைக்க வேண்டும் ஜூன் அருகே வருகிறது


அப்புசாமி
ஏப் 05, 2024 08:00

ஒன்றியத்யின் மகத்தான தோல்விகளில் இதுவும் ஒன்று.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ