உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வட்டார இறகு பந்து போட்டி

வட்டார இறகு பந்து போட்டி

வத்தலக்குண்டு : நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 10 முதல் 19 வயது வரையிலான இறகு பந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்திய கபடி அணி முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடந்தது. பரிசளிப்பு விழாவிற்கு சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சேகர் வரவேற்றார். டாக்டர்கள் முருகேச பாண்டியன், சதீஷ் பரிசுகளை வழங்கினர். ரோட்டரி நிர்வாகி நஜ்முதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !