உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் இறந்தவர் உறவினர்கள் மறியல்

விபத்தில் இறந்தவர் உறவினர்கள் மறியல்

வத்தலக்குண்டு: ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாலு 53. நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் ரோட்டில் நடந்து வந்தார்.அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை செய்தனர். இறந்த பாலுவின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடிக்கவும், அடிக்கடி நிகழும் விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி போலீஸ் ஸ்டேஷன் முன்புமறியலில் ஈடுபட்டனர். போலீசார் உறுதியளிக்க கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !