உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

கோபால்பட்டி: - கோபால்பட்டியில் ரோட்டோரம் 10-க்கும் மேற்பட்ட கட்சிகளின் கொடிக்கம்பங்கள் 20, 30அடிகளில் உயரத்தில் பெரிய கான்கிரீட் பீடங்களுடன் வைக்கப்பட்டிருந்தன. அவைகளை நீதிமன்ற உத்தரவுபடி நேற்று திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பாண்டியராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கலாவதி தலைமையிலான அலுவலர்கள் பொக்லைன் மூலம் பீடங்களை இடித்து தள்ளி, கொடி கம்பங்களை அகற்றினர். இதேபோல் எமக்கலாபுரம், கொசவபட்டி, சாணார்பட்டி, கணவாய்பட்டி, மேட்டுக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிக்கம்பங்கள் அதன் கான்கிரீட் பீடங்கள் இடித்து அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ