கொடைக்கானலில் சென்னை சிறுவர்கள் மீட்பு
வத்தலக்குண்டு:சென்னை அய்யம்பாக்கத்தை சேர்ந்த ஒரே வயதுடைய வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் 4 சிறுவர்கள் சுற்றுலா செல்ல வீட்டுக்கு தெரியாமல் கொடைக்கானல் புறப்பட்டனர். பள்ளி சென்ற பிள்ளைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருமுல்லைவாயில் போலீசில் புகார் அளித் தனர்.இந்நிலையில் ஒரு சிறுவன் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக பெற்றோருக்கு அலைபேசியில் கூறினான். சிறுவனின் பெற்றோர் பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமாரை தொடர்பு கொண்டனர்.எம்.எல்.ஏ., வத்தலக்குண்டு போலீசை தொடர்பு கொள்ள போலீசார், உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் பஸ் ஸ்டாண்டில் கொடைக்கானல் செல்ல காத்திருந்த நான்கு சிறுவர்களையும் மீட்டனர். இதனிடையே நேற்று மதியம் 12:00 மணிக்கு சென்னை திருமுல்லைவாயில் எஸ்.ஐ., முத்துக்குமாருடன் வந்த பெற்றோர் சிறுவர்களை அழைத்து சென்றனர்.