உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காலி குடங்களுடன் ரோடு மறியல்

காலி குடங்களுடன் ரோடு மறியல்

எரியோடு, செப்.24- நாகையகோட்டை புதுரோடு பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். நாகையகோட்டை புதுரோட்டில் உள்ளாட்சி நீர் ஆதாரமான ஆழ்துளை கிணறுகள் மூலமும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் கிடைக்கும் குடிநீரை கொண்டு விநியோகம் நடக்கிறது. இந்நிலையில் புதுரோட்டின் தெற்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் நடக்காததால் சிரமப்பட்டனர். அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. நேற்று திண்டுக்கல் குஜிலியம்பாறை மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா, பி.டி.ஓ., கற்பகம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து மக்களை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை