மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,கொடிக்கம்பம் அனுமதிக்க வழக்கு
04-Dec-2024
நத்தம்: -நத்தம் வத்தல தொப்பன்பட்டி சில்வார்பட்டி சாலை சேதம் அடைந்த நிலையில் இருந்தது. குண்டும் குழியுமாக இருந்த இந்த சாலையில் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு பயணித்தனர். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன் கீழ் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோட்டப் பொறியாளர் பிரசன்னா, உதவிக் கோட்டப் பொறியாளர் சொக்கலிங்கம் ஆய்வு செய்தனர். நத்தம் உதவி கோட்டப் பொறியாளர் பாலகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளர் மோகன்தாஸ் உடன் இருந்தனர்.
04-Dec-2024