உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூதாட்டியை தாக்கி வீடுகளில் கொள்ளை

மூதாட்டியை தாக்கி வீடுகளில் கொள்ளை

எரியோடு: எரியோடு அருகே வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூதாட்டியை கட்டையால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். நல்லமனார்கோட்டையை சேர்ந்த மர வியாபாரி சுப்பாபிள்ளை 60. நேற்றுமுன்தினம் இரவு பக்கத்து தெருவில் தனது மகள் வீட்டில் துாங்கினார். இவரது மனைவி செல்லம்மாள் வீட்டில் இருந்த நிலையில் அதிகாலை 2:00 மணிக்கு முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த 2 கொள்ளையர்கள் செல்லம்மாளை கட்டையால் தாக்கியதில் மயங்கினார். பீரோவில் எதுவும் இல்லாததால் வெளியேறினர். இதன்பின் கர்நாடகாவில் நிதி நிறுவனம் நடத்தும் சிவானந்தன் 45, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். சிவானந்தன் மனைவி வெள்ளையம்மாள் 40, 2 மகன்களுடன் துாங்கி கொண்டிருந்தார். பீரோவிலிருந்த ரூ. 9 ஆயிரத்தை எடுத்தபடி மேலும் தேடினர். சத்தத்தில் எழுந்த வெள்ளையம்மாள் அறை கதவை பூட்டியப்படி அலைபேசி மூலம் தனது அண்ணனிடம் கூறியபடி உடனே வாருங்கள் என சத்தமாக கூற கொள்ளையர்கள் தப்பினர். இதே ஊரில் மேலும் சில வீடுகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடு பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை