உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் ரோப் கார் சோதனை

 பழநியில் ரோப் கார் சோதனை

பழநி: பழநி முருகன் கோயில் செல்ல ரோப் கார் உள்ளது. ரோப் கார் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு பாலங்கள் வெல்டிங் உறுதி தன்மையை சோதிக்கும் சோதனை நேற்று துவங்கியது. அறிவியல் தொழிலக ஆய்வு மைய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி பொறியாளர்கள் நான்கு பேர் வந்துள்ளனர். இவர்கள் காந்தம், வேதியியல் பொருட்களை கொண்டு வெல்டிங் இணைப்பு உறுதி தன்மையை சோதனை செய்தனர். சோதனை இன்று நிறைவு பெற உள்ளது. நாளை (நவ.15) முதல் ரோப் கார் வழக்கம் போல் இயங்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ