உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் ரூ.320 கோடி பணிகள்: அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரத்தில் ரூ.320 கோடி பணிகள்: அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம்: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 50 மாத ஆட்சி காலத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.320 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்ஒட்டன்சத்திரம் நகராட்சி ஏ.பி.பி. நகர் விரிவாக்க பகுதி, சத்யா நகர், ஆர்.எஸ்.பி.நகர், திருவள்ளுவர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் , சாலை பணிகள் மேற்கொள்வதற்கு நடந்த பூமி பூஜையில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதிகள் 5 அமைப்பதற்கு தலா ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். அதில் ஒரு விடுதி ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தொப்பம்பட்டியில் ரூ.15 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. கேதையுறும்பில் 42 ஏக்கரில் விளையாட்டு மைதானம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 50 மாத ஆட்சி காலத்திற்குள் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.320 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவிரி குடிநீர் திட்டப்பணிகள் செப்டம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.தாசில்தார் சஞ்ஜய் காந்தி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணை த்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணி பிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், கணக்காளர் சரவணன் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ